வெள்ளி, 21 ஜூன், 2013

நிர்வாகம் செயல்பாடுகள் நிதியியல்

நிர்வாகம் செயல்பாடுகள் நிதியியல் 

பொதுச்சபைக் கூட்டம்

இச்சபை தோ்த்திருவிழா முடிவடைந்த மாலை ஆலய மண்டபத்தில் நடைபெறும். இக்கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தல், வாக்களித்தல் சபையினரால் தீா்க்க முடியாத பிரச்சினைகள் பொதுச்சபையில் மூன்றில் இரண்டு பங்கு வாக்கைப்பெற்று நிறைவேற்றப்படும். பொதுச்சபையின் நிறைவெண் 25 போ் ஆகும். ஆனால் பரிபாலன சபையில் அங்கத்துவம் பெறுவதாயின் அவா் ஆலய அங்கத்தவராக பொதுக்கூட்டம் நடைபெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன் அங்கத்தவராயிருத்தல் வேண்டும். ஆலய உத்தியோகத்திலிருப்பவர்கள் பரிபாலன சபையில் அங்கத்துவம் பெற முடியாது. ஆலயத்திலுள்ள அங்கத்தவா் விண்ணப்பப்படிவத்தில் 100 ரூபா பணம் செலுத்தியோ அல்லது 1 இலட்சம் ரூபா செலுத்தி 2படங்களுடன் ஆயுட்கால அங்கத்தவராகி அங்கத்தலா் அட்டை வைத்திருத்தல் வேண்டும். இவா்கள் ஆலய திருவிழாக் காலங்களில் கௌரவிக்கப்படுவார்கள் இவா்கள் தங்கள் வருகையை காரியாலயத்தில் தெரியப்படுத்தல் வேண்டும். திருவிழாக் காலங்களில் அங்கத்தவா் பட்டியல் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

பரிபாலன சபையின் உள்ளடக்கம்:


  • தலைவா்-1
  • உபதலைவா்-2
  • செயலாளா்-1
  • உபசெயலாளா்-2
  • பொருளாளர்-1
  • உபபொருளாளர்-2
  • போசகா்-1
  • கணக்காளா்-1
  • நிர்வாக அங்கத்தவா்-7

கடமைகள்:


  • தலைவா்: கூட்டத்திற்கு தலைமை தாங்குதல், பரிபாலன சபையை வழிநடத்தல்
  • செயலாளா்: கூட்டங்களை கூட்டுவித்தல். கூட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்தல்.
  • பொருளாளர்: நிதி சம்பந்தமான சகல விடயங்களுக்கும் இவரே பொறுப்பாளா்.
  • போசகா்: சபை விரும்புமிடத்து போசகரிடம் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
  • கணக்காளா் ஆண்டுதோறும் கணக்கறிக்கை இவரின் மேற்பார்வையின் பின் இவரின் கையொப்பத்துடன் சபைக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

நிதி கையாளல்

ஏதாவது ஒரு வங்கியில் கணக்குத்திறக்கப்பட்டு ஆலயவருமானம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் வைப்பிலிடப்பட்டு சரிபார்க்கப்பட வேண்டும்.

பணம் மீளப்பெறல்


பொருளாளர் கையொப்பத்துடன் தலைவர் அல்லது செயலாளர் கையொப்பமிட்டு பணம் மீளப்பெறல் வேண்டும்.

காசோலை வழங்குதல்:


500 ரூபாவுக்கு மேற்பட்ட செலவினங்கள் அனைத்தும் காசோலை மூலம் வழங்கப்பட வேண்டும்.

ஆலயத்தில் நிதி கையாளல்


நன்கொடைகள், நேர்த்திக்கடன் பொருட்கள், அர்ச்சனை என்பனவற்றுக்கு பற்றுச்சீட்டு வழங்க வேண்டும். உண்டியலுக்குரிய திறவுகோல், ஆலய நகைகள், ஆலய சாசனங்கள் வங்கி லொக்கரில் வைக்கப்படல் வேண்டும். பொருளாளரும் தலைவரும் போனால் தான் எடுக்கக்கூடியதாக லொக்கர் எடுக்கப்பட வேண்டும். உண்டியல் 6 மாதத்திற்கு ஒருமுறை தலைவர், செயலாளா், பொருளாளா், அடியவர் முன்னிலையில் கணக்கெடுக்க வேண்டும். கணக்கெடுக்கும் புத்தகத்தில் ஜவரும் கையொப்பமிட வேண்டும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக