புதன், 26 ஜூன், 2013

புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணியர் கோவில் கும்பாபிசேக நிகழ்வு தாயகத்தில்டான் யாழ் ஒளி  தொலைக்காட்சி ஊடாக  இருந்து நேரடி ஒளி பரப்பு செய்யப்படவுள்ளது 

மடத்துவெளி முருகன் கோவில் என்றழைக்கப்படும் பாலசுப்ரமணியர் கோவில் மூன்று தசாப்தங்களை கடந்து பாரிய பொருட் செலவில் முற்றிலுமாக புனருத்தாரணம் செய்யபட்டுள்ளது.அத்தோடு புதிய ராஜகோபுரமும் கட்டப்பட்டு எதிர்வரும் 28 ஜூன் வெள்ளியன்று காலை 8 மணிக்கு குடமுழுக்கு காணவுள்ளது. புலம்பெயர்ந்து உலகமெங்கும் வாழும் இந்த பகுதி மக்களினால் திரட்டப்பட்டு  வழங்கப்பட்ட  பெரும்பொருளுதவி கொண்டு இந்த ஆலயம் நவீன முறையில் முற்றிலுமாக சீர்திருத்தம் செய்யபட்டு வருகின்றது .ராஜகோபுரம் சிற்பதேர், தேர்முட்டி ,மூலஸ்தானம், வசந்த மண்டபம், பிள்ளையார் அம்மன் வைரவர் ஆலயங்கள் ,மணிமண்டபம் சுற்று வீதி ,வெளிப்புற சுவர் ,முற்றிலும் புதிய கூரை அமைப்பு  ,உள் வெளி கிணறுகள், பின்பக்க தோட்டம் ,இரண்டு மனிகூண்டுகள், புதிய நவீன தரை விரிப்பு ,மலசலகூடம்,ஆலய குருவின் வீடு, வெளி வீதி ,சுற்று புறம் என அனைத்தும் நுணுக்கமான முறை கொண்டு திறம்பட  அமைக்கபட்டுள்ளன.புதிய நிர்வாகத்தின் கீழ் இந்த பணிகள் கவனிக்கபட்டு சிறப்பாக முடிவுறும் தறுவாயில் உள்ளது .
நடைபெறவுள்ள கும்பாபிசேக நிகழ்வுகளை  29 ஜூன் இரவு 10 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து ஒளிபரப்பாகும் டான் யாழ் ஒளி தொலைக்காட்சி மூலம் உலகெங்கும் காண முடியும் இந்த ஒளிபரப்பு  பற்றிய முழுவிபரம் பின்னர் அறியத்தரப்படும் 

வெள்ளி, 21 ஜூன், 2013

ஆலய ஒழுங்குகள்

  • ஆலய ஒழுங்குகள் 
  • ஆண்கள் மேலங்கி அணிந்து செல்லல்.
  • பாதரட்சையுடன் செல்லல்.
  • தொப்பியணிந்து செல்லல்
மது,சிகரெட்,வெற்றிலை.சுவிங்கம்,தொலைபேசி பாவித்தல் என்பன ஆலயத்தில் பாவித்தல் தடை செய்யப்பட்டு ள்ளது. ஆலயத்தினுள் மகளிரை இம்சைப்படுத்தும் விதத்தில் நடந்து கொள்வதாக புகார் கிடைக்கும் பட்சத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தினரால் ஆலயத்தை விட்டு அவா் வௌியேற்றப்படுவார்.

சொத்துக்கள் பதிவு பாதுகாப்பு

சொத்துக்கள் பதிவு பாதுகாப்பு 
ஆலய சொத்துக்களுக்கான பதிவேடு பேணப்பட வேண்டும். அதே போல் பாவனைக்கு கொடுக்கப்படும் போதும் பதிவேடு ஒன்று பாவிக்கப்பட வேண்டும். ஆண்டுதோறும் இவை சரிபார்க்கப்பட்டு தலைவா், செயலாளா், பொருளாளரினால் உறுதிப்படுத்தி கையொப்பமிட வேண்டும்.
டியார் பதிவேட்டுப் புத்தகம் இப் புத்தகத்தில் ஆலயத்திற்கு வரும் அடியார்கள் தங்கள் பெயா்,முகவரி, ​தொலைபேசி இலக்கங்களை எழுதிச் சென்றால் ஆண்டுக்கு ஒருமுறை இறைவன் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.
இவ் யாப்பில் மாற்றங்கள் செய்ய விரும்புபவா்கள் மாற்றங்களை எழுத்து மூலம் சபைக்கு தெரியப்படுத்தி பொதுக்கூட்ட நிகழ்ச்சி நிரலில் சோ்க்கப்பட்டு சபையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குப் பெற்று சபையின் அங்கீகாரம் பெற்றால் மாத்திரமே திருத்தம் செய்ய முடியும்.
இவ் ஆலய யாப்பு 20 பிரதான அம்சங்களை கொண்டதாகவும் 2012 ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திரு.அ.சண்முகநாதனால் சபையில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு புதிய நிர்வாக சகையும் தெரிவு செய்யப்பட்டு அவர்களினால் கையொப்பமிட்டு அங்கீகாரம் அளிக்கப்பட்டது.

அலுவலா்

  • காரியாலய அலுவலா்
  • பிரதம குருவானவா்
  • ஆலய பூசகா்
  • ஆலய மெய்காவலா்
  • மின்சாரம்,ஒலிச்சாதனங்கள் இயக்குனா்

வேதனம் வழங்கல்:


பரிபாலனசபைக்கு ஆலய உத்தியோகத்தா்களின் சம்பளங்களைத் தீா்மானிக்கும் அதிகாரம் வழங்கப்படுகிறது.

தொண்டா் படை (சமூக சேவையாளா்கள்)


புங்குடுதீவு சன சமூக நிலையம், கமலாம்பிகை கனிஷ் மகாவித்தியாலய மாணவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

பூசை நேரங்கள்


பூசை நேரங்கள்:

2 மணிக்கோபுரம்


  • காலை ஆயத்தமணி 5.00 காலை
  • மதியம் ஆயத்தமணி 11.00 காலை
  • மாலை ஆயத்தமணி 5.00 மாலை


ஆலயம் காலை 6.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரை ஆலயம் திறந்திருக்க வேண்டும்.1 மணிக்கோபுரம்


  • பூசை மணி 6.00 காலை
  • பூசை மணி 12.00 மதியம்
  • பூசை மணி 6.00 மாலை


நிர்வாகம் செயல்பாடுகள் நிதியியல்

நிர்வாகம் செயல்பாடுகள் நிதியியல் 

பொதுச்சபைக் கூட்டம்

இச்சபை தோ்த்திருவிழா முடிவடைந்த மாலை ஆலய மண்டபத்தில் நடைபெறும். இக்கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தல், வாக்களித்தல் சபையினரால் தீா்க்க முடியாத பிரச்சினைகள் பொதுச்சபையில் மூன்றில் இரண்டு பங்கு வாக்கைப்பெற்று நிறைவேற்றப்படும். பொதுச்சபையின் நிறைவெண் 25 போ் ஆகும். ஆனால் பரிபாலன சபையில் அங்கத்துவம் பெறுவதாயின் அவா் ஆலய அங்கத்தவராக பொதுக்கூட்டம் நடைபெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன் அங்கத்தவராயிருத்தல் வேண்டும். ஆலய உத்தியோகத்திலிருப்பவர்கள் பரிபாலன சபையில் அங்கத்துவம் பெற முடியாது. ஆலயத்திலுள்ள அங்கத்தவா் விண்ணப்பப்படிவத்தில் 100 ரூபா பணம் செலுத்தியோ அல்லது 1 இலட்சம் ரூபா செலுத்தி 2படங்களுடன் ஆயுட்கால அங்கத்தவராகி அங்கத்தலா் அட்டை வைத்திருத்தல் வேண்டும். இவா்கள் ஆலய திருவிழாக் காலங்களில் கௌரவிக்கப்படுவார்கள் இவா்கள் தங்கள் வருகையை காரியாலயத்தில் தெரியப்படுத்தல் வேண்டும். திருவிழாக் காலங்களில் அங்கத்தவா் பட்டியல் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

பரிபாலன சபையின் உள்ளடக்கம்:


  • தலைவா்-1
  • உபதலைவா்-2
  • செயலாளா்-1
  • உபசெயலாளா்-2
  • பொருளாளர்-1
  • உபபொருளாளர்-2
  • போசகா்-1
  • கணக்காளா்-1
  • நிர்வாக அங்கத்தவா்-7

கடமைகள்:


  • தலைவா்: கூட்டத்திற்கு தலைமை தாங்குதல், பரிபாலன சபையை வழிநடத்தல்
  • செயலாளா்: கூட்டங்களை கூட்டுவித்தல். கூட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்தல்.
  • பொருளாளர்: நிதி சம்பந்தமான சகல விடயங்களுக்கும் இவரே பொறுப்பாளா்.
  • போசகா்: சபை விரும்புமிடத்து போசகரிடம் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
  • கணக்காளா் ஆண்டுதோறும் கணக்கறிக்கை இவரின் மேற்பார்வையின் பின் இவரின் கையொப்பத்துடன் சபைக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

நிதி கையாளல்

ஏதாவது ஒரு வங்கியில் கணக்குத்திறக்கப்பட்டு ஆலயவருமானம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் வைப்பிலிடப்பட்டு சரிபார்க்கப்பட வேண்டும்.

பணம் மீளப்பெறல்


பொருளாளர் கையொப்பத்துடன் தலைவர் அல்லது செயலாளர் கையொப்பமிட்டு பணம் மீளப்பெறல் வேண்டும்.

காசோலை வழங்குதல்:


500 ரூபாவுக்கு மேற்பட்ட செலவினங்கள் அனைத்தும் காசோலை மூலம் வழங்கப்பட வேண்டும்.

ஆலயத்தில் நிதி கையாளல்


நன்கொடைகள், நேர்த்திக்கடன் பொருட்கள், அர்ச்சனை என்பனவற்றுக்கு பற்றுச்சீட்டு வழங்க வேண்டும். உண்டியலுக்குரிய திறவுகோல், ஆலய நகைகள், ஆலய சாசனங்கள் வங்கி லொக்கரில் வைக்கப்படல் வேண்டும். பொருளாளரும் தலைவரும் போனால் தான் எடுக்கக்கூடியதாக லொக்கர் எடுக்கப்பட வேண்டும். உண்டியல் 6 மாதத்திற்கு ஒருமுறை தலைவர், செயலாளா், பொருளாளா், அடியவர் முன்னிலையில் கணக்கெடுக்க வேண்டும். கணக்கெடுக்கும் புத்தகத்தில் ஜவரும் கையொப்பமிட வேண்டும்..

திருவிழா,விசேஷ தினங்கள் ,உபயகாரர்

  • திருவிழா விபரம் 

    • 1 ஆம் திருவிழா (கொடியேற்றம்)
    • 2 ஆம் திருவிழா
    • 3 ஆம் திருவிழா
    • 4 ஆம் திருவிழா
    • 5 ஆம் திருவிழா (கப்பல் திருவிழா)
    • 6 ஆம் திருவிழா
    • 7 ஆம் திருவிழா
    • 8 ஆம் திருவிழா
    • 9 ஆம் திருவிழா
    • 10 ஆம் திருவிழா
    • 11 ஆம் திருவிழா (சப்பறத்திருவிழா)
    • 12 ஆம் திருவிழா (தோ்த்திருவிழா)
    • 13 ஆம் திருவிழா (தீா்த்தத்திருவிழா)
    • 14 ஆம் திருவிழா (பூங்காவனம்)
    • 15 ஆம் திருவிழா (வைரவா் மடை)

    விசேஷ தினங்கள் 
  • புத்தாண்டு புதுவருடப்பிறப்பு
  • தைப்பொங்கல்
  • தைப்பூசம்
  • பங்குனி உத்தரம்
  • சித்திரை வருடப்பிறப்பு
  • கதிர்காம உற்சவம்
  • ஆவணி சதுர்த்தி
  • சரஸ்வதி பூசை
  • கந்தசஷ்டி
  • திருக்கார்த்திகை
  • திருவெம்பாவை
  • சூரசம்மாரம்
  • புரட்டாதிச் சனி

திருவிழா மற்றும் விசேஷ தின உபயகாரர் கடமைகள் 

ஒரு குடும்பத்திற்கு ஒரு திருவிழா மட்டுமே செய்ய அனுமதிக்கப்படுவா். 1ஆம் திருவிழா, 9ஆம் திருவிழாக்காரா் கொடி மரம், தேரின் பராமரிப்பு திருவிழாக்காரரே பொறுப்பாளிகள், நிகழ்வு நடப்பதற்கு ஒரு மாதத்தின் முன் பணம் செலுத்தி பற்றுச்சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும். அனைத்து ஒழுங்குகளும் ஆலயமே பொறுப்பு
  • விசேட ஒழுங்குகள் செய்வதாயின் ஆலயக்கட்டுப்பாடுகளுக்கு அமைய புனிதமான ஒழுங்குகள் ஆலயத்தால் ஏற்றுக்கொள்ளப்படும்.
  • திருவிழாக்காலங்களில் தொ்ப்பை போடும் நிலை இருவருக்கு மட்டுமே போட அனுமதிக்கப்படுவா்.
  • திருவிழாக்காலங்களில் நேரக்கட்டுப்பாடு நிர்வாகத்தினரே பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • திருவிழாக்காலங்களில் நிர்வாகத்தினா் கட்டாயமாக சமூகமளிக்க வேண்டும்.

படித்தரம் நிர்ணயம்:

  • பூசகா் சம்பளம்
  • பூசைப்பொருட்கள்
  • மெய்க்காவல் சம்பளம்
  • மின்சாரக்கட்டணம்
  • ஏனைய பில்கள் உள்ளடங்கலாக அமையும்.
  • திருவிழா உபயகாரா், மாதாந்த செயற்பாட்டாளா், விசேட தின உபயகாரா் அதிலிருந்து விலகுவதாயின் 6 மாதங்களுக்கு முன் தெரியப்படுத்த வேண்டும்


ஆலய யாப்பு

ஆலய யாப்பு 


ஆலயத்தின் பெயா்:

  • இளந்தாரி நாச்சிமார் என வழங்கு ஶ்ரீ பாலசுப்பிரமணியா் ஆலயம் (வயலூா் முருகன்)

ஆலய அமைப்பு:

  • மூலத்தான மூலவா் வேல்
  • ஆறுமுகசுவாமி
  • முத்துக்குமாரசுவாமிி
  • பிள்ளையார்
  • சண்டேசுவரா்
  • நவக்கிரக பீடம்
  • வயிரவா்

ஆலயம் அமைந்துள்ள இடம்:

  • 7ம் வட்டாரம்
  • மடத்துவௌி
  • புங்குடுதீவு

காணியின் எல்லைகள்:

  • வடக்கு - நாகநாதபிள்ளை நடராசா
  • கிழக்கு - சிதம்பரம் அம்பலவாணர் கோயில்
  • தெற்கு - பொன்னையா செல்வானந்தம்
  • மேற்கு - வேலாயுதர் இளையதம்பி மனைவி அன்னப்பிள்ளை

அா்ச்சகா் இல்லம், அன்னதான மடம்:

  • மேற்கு வீதியில், ஆலய பிரதான வீதியிலிருந்து 50மீற்றர் தொலைவில் பிரதான வீதியில்.

பிரதான நுழைவாயில்:

  • 24' அகலமான 1/2 நீள தெரு பிரதான வீதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

தீர்த்தக்கேணி:

  • ஆலயத்திற்கு கிழக்கே அமைந்துள்ளது..

கிணறுகள்:

  • ஆலய முன்றலில் வடக்கு கிழக்கு மூலையில் ஒன்று
  • ஆலய பூந்தோட்டத்தில் வடக்கு மேற்கு மூலையில் ஒன்று
  • ஆலயத்தினுள் மஞ்சக்கிணறு

மலசலகூடம்:

  • ஆலய மலசலகூடம் ஒன்று, அா்ச்சகா் இல்லத்தில் ஒன்று.

நிர்வாகம் 2012

நிர்வாகம் 2012


தலைவர்

  • அ. சண்முகநாதன்.
  • உபதலைவர்

    • வை. கனகலிங்கம்.
    • கு. சண்முகலிங்கம்

  • செயலாளர் 

  • க. சதீபன்

பொருளாளர்

  • ந. சசிதரன்

நிர்வாக அங்கத்தவர்

  • கு. செல்லத்துரை
  • கை. கேதீஸ்வரன்
  • மு. வேலுப்பிள்ளை
  • ந. காராளபிள்ளை
  • க. வீராசிங்கம்
  • கி. சொளர்ந்தநாயகி
  • ரா. சசிகலா

கணக்காளர்

  • சிவலிங்கம்

  • பொது பிரதிநிதி

    • சே. சுந்தரலிங்கம்

    கணக்காளர்

    • சிவலிங்கம்

    2012 ஆம் ஆண்டு பொதுச்சபையில் அங்கீகார

    ம் பெறப்பட்ட ஶ்ரீ பாலசுப்பிரமணிய ஆலய யாப்புக்கு அமைய தெரிவு செய்யப்பட்ட புதிய பரிபாலன சபையின் பரிபாலன கால அளவு 2014 பங்குனி 30ம் திகதி வரை (புதிய பரிபாலன சபை தெரிவு செய்யும் காலம் வரை இச்சபை இயங்கும் அதிகாரம் கொண்டதாகும்) குறை திருப்பணி வேலைகள் முடிவு செய்ய வேண்டியகாரணத்தால் பொதுச்சபையின் அங்கீகாரத்துடன் ஓராண்டுகாலம் நீடிக்கப்பட்டுள்ளது.



வரலாறு


வரலாறு -ஆக்கம்-சிவ -சந்திரபாலன் சுவிட்சர்லாந்து (புங்குடுதீவு 8)
_________________


சின்ன நல்லூர் என்று செல்லமாக அழைக்கப்படும் புங்குடுதீவு மடத்துவெளி ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோவில் ஆரம்ப காலத்தில் நாச்சிமார் கோவில் என்றே அழைக்கப்பட்டது. புங்குடுதீவினுள் நுழைந்ததும் முதலில் வரும் கிராமம் மடத்துவெளி.இக்கிராமத்தினுள் நுழைந்ததும் பிரதான வீதியின் வலது புறம் நெடுகிலும் பச்சைப் பசேலென்ற நெல் வயல்களின் நடுவே கிழக்கு நோக்கி சிங்காரமாய் கோலோச்சும் முருகப்பெருமானின் அழகுமிகு திருத்தலம் காட்சியளிக்கும் .கம்பீரமாய் எழுந்து நிற்கும் சிற்பத் தேர் முட்டியின் பின்னே பனங்கூடலின் பின்னணியில் அருள் புரியும் பாலசுப்பிர மணியர் எழுந்தருளி இருக்கிறார்                                                                                   .                             இளந்தாரி    நாச்சிமார் கோவில் என்ற தொன்மை பெயரை கொண்ட இவ்வாலயம் சுமார் நானூறு ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும் . நானூறு ஆண்டுகளுக்கு முன்னே வள்ளி நாச்சியார் அயல் கிராமத்தில் இருந்து மடத்துவெளி கிராமத்தைச் சேர்ந்தவரை திருமணம்  செய்தார் .மணமகளான நாச்சியார் மணமகன் வீட்டில்  மூன்று நாள் தங்கி வழமைப்படி இருந்தார் .மூன்றாம் நாள் காலை  நாச்சியார் முன் புறம் உள்ள வயலில் இறங்கிய போது வயலின் உரிமையாளர் ´´நீர் புகுந்த  வீடு எம்மோடு சேர்ந்து வாழும் தகுதி அற்றது .என்று ஏளனம் செய்தார்.இதனை கேட்டு கவலையுற்ற நாச்சியார் அதே இடத்திலேயே தனது தாலிய கழற்றி அந்த வயல் வரம்பில் ஒரு கல்லின் மீது வைத்து சிரட்டையால் மூடி விட்டு தனது பிறந்த வீட்டுக்கு சென்று விட்டார் . இதனை கண்ட இவரது கணவர் அன்று முதல் அதே இடத்தில அந்த கல்லை வைத்து ஒரு கோவிலை உருவாக்கி வழிபட்டு தானும் மறுமணம் செய்து வாழ்ந்து வந்தார் .வள்ளி நாச்சியார் தனது பிறந்த ஊருக்கு சென்று அங்கே உள்ள இழுப்பண்ணை  என்னும் இடத்தில் ஒரு ஆலயத்தை வைத்து வழிபட்டார் அந்த ஆலயம் வல்லன் இழுப்பண்ணை நாச்சிமார் கோவில் என் இப்போதும் அழைக்கப் படுகின்றது                                                                                                                                                       .                                                                                                                                                  மடத்துவெளி நாச்சிமார் கோவிலின் தெற்கில் ஒரு அரசமரம் நின்றது அங்கே ஒரு பாம்பு ஒன்று வாழ்ந்து வந்ததாகவும் கூறப் படுகின்றது .இந்த அரச மரத்தின் வேரானது நீளமாக பக்கத்தில் இருந்த சுண்ணாம்பினால் ஆனா மடப்பள்ளி அடிப்பக்கம் வரை ஒரு மனித கை கால் உருவில் படர்ந்திருந்ததகவும் வரலாறு கூறுகிறது .
இவ்வாலயம் 1960 ஆண்டு காலத்தில் புனரமைக்கப் பட்டு அதன் உரிமையாளராக திரு வேலுப்பிள்ளை சபாபதி இருந்து வந்தார் .இவரது வறுமை காரணமாக தொடர்ந்து இவ்வாலயத்தை வர்த்தகர் வி.அருணாசலம் பொறுப்பேற்ற பின்னர் முற்று முழுதாக ஆலயம் புனரமைக்கப்பட்டது .கருவற்றின் உள்ளே வேலாயுதமும் வடமேற்கு மூலையில் நாச்சியாரின் விக்கிரகமும் பிரதிஸ்டை செய்யப்பட்டு ஆலயத்தின் பெயரும் பாலசுப்ரமணியர் கோவில் என்றும் மற்றப் பட்டது.                                                                            


சின்ன    நல்லூர் என்று செல்லமாக அழைக்கப் படும் இந்த ஆலயத்தில் நல்லூர் ஆலயம் போன்றே சரியான நேரத்தில் பூஜை நடைபெற்று வருகிறது.அத்தோடு இவ்வாலயத்தின் திருவிழாக்கள் மிக கட்டுப் பாட்டுடன்  முறையான சைவ விதிமுறைக்கு ஏற்ப நடைபெறுவது வழக்கம் .திருவிழா தினமும் பகலும் இரவும் பன்னிரண்டு மணிக்கே முற்றாக முடிவுறும் அத்தோடு சமய கொள்கைகளுக்கு உட்படாத சினிமா பாடல்களை கொண்ட நிகழ்சிகள் கேளிக்கை வேடிக்கை நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட்ட நிலையிலேயே திருவிழா நடைபெறும் .திரு அருணாசலத்தை தொடர்ந்து வர்த்தகர் வி.இராமநாதன் பொறுபேற்றார் .இவரது முயற்சியில் இவ்வாலயத்தில் எழுபதுகளின்  ஆரம்பத்தில் புன்குடுதீவிலேயே முதன் முதலாக முறையான முற்றிலும் சித்திர வேலைபாட்டில்  முடி வரை அமையபெற்ற நல்லோர் ஆலயத் தேரை ஒத்ததான சித்திரத் தேர் வீதியுலா வந்த பெருமை பெற்றது  .அத்தோடு புங்குடுதீவில் நுழைந்ததுமே பார்போரை வசீகரிக்கும் அழகான தேர்முட்டியும் அமைக்கப் பட்டது.மடத்துவெளி பிரபல வர்ததகர் அண்ணாமலை மாணிக்கம் அவர்கள் தனது மனைவி நினைவாக ஒரு அன்னதான மண்டபத்தை அமைத்து கொடுத்துள்ளார் .திருவிழாக் காலத்தில் இங்கே அன்னதானம் நடைபெறும் .இந்த பணியை சிறப்பாக மடத்துவெளி சனசமூக நிலையத்தினர் தொடர்ந்து செய்து வந்தனர் .1987 முதல் இந்த அன்னதான பணியை அமுதகலசம் என்னும் நாமமிட்டு தமது சொந்த பொறுப்பில் நடத்தி சிறப்பித்தனர் .வர்த்தகர் பா.பாலசுந்தரம் தாகசாந்தி நிலையத்தை திருவிழாக் காலங்களில் நடாத்தி வருகிறார் .




இவ்வாலயத்தின் கொடியேற்றம  எட்டம் திருவிழா பூங்காவனம் தீர்த்தம் உட்பட சிறப்பான சித்திரதேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெறும் அன்றைய தின பச்சை சாத்தும் காட்சி கண் கொள்ளா வகையில் கணக் கூடியதாகவிருக்கும் .மேலும் சூரன்போர் வாழை வெட்டு கந்தசஸ்டி திருவெம்பாவை போன்ற விழாக்களும் மிக சிறப்பானதாக இருக்கும் திருவெம்பாவை அதிகாலை 4 மணிக்கு ஆரம்ப மணியோசையுடன் தொடக்கி திருப்பள்ளி எழுச்சி படி துயில் எழுப்புதல் மங்கள வதியகசேரி கூட்டு வழிபாடு என வரிசையாக நடைபெட்டு காலை ஆறரைக்கு முடிவுறுதல் வரலாற்றுபதிவாகும்.இதே காலத்தில் கூட்டு வழிபாட்டு மன்றத்தினர் அதிகாலையிலேயே சங்கு சேமக்கலம் சகிதம் கிராமந்தோறும் பள்ளி எழுப்பும் தொன்மை வாய்ந்த நிகழ்வை மேற்கொள்வர்.
இவ்வாலயத்தின் கூட்டு வழிபாடு மன்றம் தீவுப்பகுதியில் மிக சிறப்பு பெற்றது.இந்த பணியை பொறுப்பாக நான்கு தசாப்தமாக நடத்தி வந்த பெருமை உள்ளோர் வர்த்தகரான கநதையா அம்பலவானரையே சாரும் ,இவரது நிர்வகிப்பில் சீதாதேவி மகன். (பெயர் பின்னர் சேர்க்கப்படும )சீவரத்தினம் வே பாலசுரமணியம் நா.விநாயகமூர்த்தி ந.சண்முகநாதன் ந.சோமசுந்தரம் சி.பேரின்பநாதன் ,அ.தியாகலிங்கம்,இ.ஞானசேகரம் .சிவ-சந்திரபாலன் ,அ.சிவகுமார் ,அ,திருவருட்செலவன் ,இ.பாலகுகன் ,க.ரவீந்திரன் ,கு.கிருபானந்த,சே.இந்திராதேவி ம.கமலரனஞ்ஜினி ,சே.தனலட்சுமி வி பத்மினி இ திருக்கேதீச்வரி க.அருந்தவநாதன் .நா.செல்வநாயகி நா.சவுந்தரநாயகி.கி.சசிமாலா ,த.சகுந்தலாதேவி ப.யோகேஸ்வரன் பா .கைலயநாயகி போன்றோர் மிகவும் தரமான சீரான கூட்டு வழிபட்டு முறையை திறம்பட நடத்தி வந்தனர்.


இவ்வாலயத்தின் நிர்வாகப் பணிகளில் வே.சபாபதி வி.அருணாசலம் .வி.இராமநாதன் அ.பா.பாலசுப்ரமணியம் இ.குலசேகரம்பிள்ளை க.தியாகராசா வி.சுப்பிரமணியம் பொ.நாகேசு க.அம்பலவாணர் க.நாகநாதி கு கதிர்காமு கோ .நாகேசு பரராசசிங்கம் கி.சவுந்தரநாயகி வே.இளையதம்பி அ.இளையதம்பி நடராசா க.வீரசிங்கம் பா.பாலசுந்தரம் து.ரவீந்திரன்.அ.சண்முகநாதன் ந.தர்மபாலன் வே.சுப்பிரமணியம் கு.கிருபானந்தன் ஆகியோர் சிறப்பாகக் கடமை ஆற்றியிருந்தனர் .
1991 காலப்  பகுதியில் இராணுவம் உட்புக பெரும்பாலான மக்கள் இடம்பெயர ஆலயம் பொலிவிழந்து போனது .பின்னர் சோ.சிவலிங்கம் தலைவராகவும் கு.கிருபானந்தன் செயலாளராகவும் கி.சவுந்தரநாயகி பொருளாளராகவும் கொண்ட புதிய பரிபாலன சபையும் உருவாகியது.பின் வந்த காலங்களில் தம்பிபிள்ளை என்பவர் தானே தனித்து ஆலயத்தை துப்பரவு செய்து தினமும் விளக்கேற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது 2002 முதல் மீண்டு நித்தியா நைவேத்திய கிரியைகள் நடைபெற்று வருகின்றன.அண்மைக்காலமாக இந்த ஆலயத்தினை மீள்நிர்மானம் செய்து ராஜகோபுரததினை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் வேளையில் வி.இராமநாதன் அவர்கள் முருகனடி சேர்ந்தமை துரதிர்ஷ்டமானது கனடாவில் இருந்து தாயகம் திருபியுள்ள சமூக சேவகர் எ.சண்முகநாதன் தலைமையில் 2012 இல் புதிய நிர்வாக சபை அமைக்கப் பட்டு தற்போது சீரான செயல்பாட்டில் இந்த ஆலயம் புனருத்தாரணம் செய்யபட்டுள்ளது .26 ஜூன் 2013 அன்று புனருத்தாரணம் செய்யபட்ட ஆலயத்துக்கும் புதிதாக கட்டபட்ட ராஜகொபுரதுக்குமான கும்ம்பாபிசெகம் இடம்பெறுகிறது .பொதுச்சேவையில் வரலாறு களை பாதிக்கும் மடத்துவெளி இளைஞர் தலைமுறை உலகெங்கும் பரவி வாழும் காரணத்தால் இனிவரும்காலங்களில் இவ்வாலயம் மேலும் சிறப்பு பெறும் என நம்புவோமாக